தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரை குளம் கண்மாய் பெரியகுளம் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது இதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் கால்நடை வைத்திருக்கும் ஏழை எளிய மக்கள் கண்மாய்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு தன் அன்றாட வாழ்வை நடத்திக் கொண்டுவந்து இந்த நிலையில் சில தனி நபரால் கண்மாய்கள் முள்வேலி கொண்டு அடைக்கப்பட்டு அதில் சுயலாபத்திற்காக சொந்தமாக விவசாயம் செய்து வருகின்றனர் மேலும் இதில் வரும் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளை கண்மாய்க்குள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர் இதனால் கால்நடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் பெரும்பாலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு இடம் இல்லாமல் தவித்து சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் மேலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கால்நடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் மாவட்ட நிர்வாகம் கருத்தில்கொண்டு தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அகற்றுவதற்குறிய நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்