திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆணையின்படி திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் ரவீந்தரன் வழிகாட்டுதலின்படி எளியவர்களுக்கு முதியோர்களுக்கு ஊனமுற்றவர்களுக்கு மற்றும் சிவனடியார்கள் நாள்தோறும் மூன்று வேலை உணவு வழங்கி வருகின்றனர்.
உணவு வழங்கப்படும் இடங்கள் திருவண்ணாமலை அனைத்து தெருக்களுக்கும் மற்றும் மலை சுற்றுப்பாதையில் உள்ள சிவனடியார் வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மூலமாக 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது , ஜடை சாமியார் ஆசிரமத்தில் இருந்து 600 பெயருக்கு மதிய மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது,
யோகிராம் ஆசிரமத்தில் 300 நபர்களுக்கு மதிய உணவு மட்டும் வழங்கப்படுகிறது, விசிறி சாமியார் ஆசிரமத்தில் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மற்றும் நகராட்சி அம்மா உணவகத்தின் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்து உணவுகளும் திருக்குறிப்பு திருமண மண்டபத்தில் வந்தடைகிறது அதனை நகராட்சி ஊழியர்கள் பொட்டலமாக தயார் செய்து தெரு வாரியாக வினியோகம் செய்கின்றனர்
ஏழை எளியவர்களுக்கு, முதியோர்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு, மற்றும் சிவனடியார்களுக்கு காலை மாலை இரவு என மூன்று வேளை உணவு பொட்டலங்கள் நகராட்சி ஊழியர்கள் மூலமாக அவரவர் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்படுகிறது.